Monday, 25 July 2011

பாதிக் கேக்







தேவையான பொருட்கள்:

மேரி பிஸ்கட் (Marie Biscuit) - 350g

பட்டர்   - 125g

முட்டை- 2

கோகோ பவுடர் - 1 கப்

மிலோ - 1/2 கப்

தண்ணீர்- 1 கப்

சீனி- 3/4 கப்

**மிலோ அல்லது கோகோ பவுடர் உங்கள் விருப்பம் போல் மாற்றலாம்.
அதிக சாக்லேட் சுவை வேண்டும் என்றால் 1 கப் கோகோ பவுடர் + 1/2 கப் மிலோ சேர்க்கலாம்! கொஞ்சம் குறைவான சாக்லேட் சுவை வேண்டும் ஏற்றால் 1 கப் மிலோ + 1/2 கப் கோகோ பவுடர் சேர்க்கலாம்.

செய் முறை:

* மேரி பிஸ்கட் டை சிறு துண்டுகளாக்கி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் கோகோ பவுடர், மிலோ, தண்ணீர் மற்றும் சீனி சேர்த்து சிறு தீயில் வைக்கவும். ஒன்று சேர கரைக்கவும்.

* பட்டர் சேர்த்து கரையும் வரை கலக்கவும். இதனுடன் முட்டை சேர்த்து 30 வினாடிகளில் அடுப்பை ஆப் செய்யவும்,

* பிஸ்கட் துண்டுகளை இதனுடன் சேர்த்து மெதுவாக பிரட்டவும்.

* ஒரு பேக்கிங் பாத்திரத்தில் இதை வைத்து மெதுவாக சமமாக அழுத்தி. பிறகு fridge-இல் வைத்து சிறு துண்டுகளா வெட்டி பரிமாறவும்.


Try Your Best :)

From DiV@NaFRiN

No comments:

Post a Comment